'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' - கடைசி டிரெய்லர் வெளியானது

இப்படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-05-21 16:01 IST

சென்னை,

'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தின் கடைசி டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் தற்போது 'ஜுராசிக் வேர்ல்ட்' படத்தின் 4-வது பாகமான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்திற்கு கதை எழுதியுள்ளார். காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி இருந்தது. இந்நிலையில்,  இதன் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்