காந்தாரா சாப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

இந்தப் படத்தில் அவர் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-09-16 21:20 IST

ஐதராபாத்,

ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ' காந்தாரா: சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹொம்பாலே பில்ம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 7 இந்திய மொழிகளில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்