கவுதம் ராம் கார்த்திக் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்

தினா ராகவன் இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தார்;

Update:2025-12-12 21:12 IST

நடிகர் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இவர் நடிக்கும் ‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜி.ஆர்.கே 19’ என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

புகழ்பெற்ற திரைப்படத் இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, முழு குழுவினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, முதல் ஷாட் கிளாப் அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவரது வருகை மற்றும் பாராட்டு, ‘ஜி.ஆர்.கே 19’ குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை சேர்த்தது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்களை வாழ்த்தியதற்கு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர. இப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்