திருமணமாகி ஓராண்டு நிறைவு...சிறப்பு வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

தற்போது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.;

Update:2025-12-12 22:26 IST

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு இதே நாள் தனது நண்பர் ஆண்டனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இன்றுடன் அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், தனது திருமண நினைவுகளையும், தனது கணவர் ஆண்டனியுடன் செய்த குறும்புகளையும் பகிர்ந்துள்ளார்.

தற்போது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்