"யு", "ஏ", "யு/ஏ" இனி இல்லை... 3 வெவ்வேறு வகையான திரைப்பட தணிக்கை சான்றிதழ்

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.;

Update:2025-06-02 14:30 IST

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்பட அனைவரும், குழந்தைகள் மட்டும் அல்லது பெரியவர்கள் என வயதை அடிப்படையாக குறிப்பிட்டு தணிக்கைச் சான்று வழங்குவது குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.. தங்கள் குழந்தைகளை எந்த திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வது, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குழந்தைகள் காண்பதற்கு உகந்ததா? என்று பெற்றோர் எளிதாக கண்டறியும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதற்காக பொதுமக்களுக்கு திரையிடப்படும் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில் 1991-இல் கொண்டுவரப்பட்ட விதிகளில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இனி 18 வயதுக்கு கீழ் மட்டும் மூன்று வகையான சென்சார் அதாவது 7, 13 மற்றும் 16 வயதுகளுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படங்களை தனித்தனியாக வகைப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

புதிதாக அறிமுகமாகும் மூன்று வகைகள்:

யு/ஏ7+ – 7 வயதுக்கு மேல் மற்றும் பெற்றோர் பரிந்துரையுடன் சிறார்களுக்கானது

யு/ஏ13+ – 13 வயதிற்கு மேற்பட்ட இளம் பார்வையாளர்களுக்கானது

யு/ஏ16+ – 16 வயதிற்கு மேல் வயதுடையவர்களுக்கு

இந்நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர், குழந்தைகளுக்கேற்ப எந்த வகை படங்களை காண அனுமதிக்கலாம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன், 'யு', 'ஏ', 'யு/ஏ' போன்ற பொதுவான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்