காபிபோசா சட்டத்திற்கு தடை கோரி ரன்யாராவ் தாய் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-24 06:44 IST

பெங்களூரு ,

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இன்னும் ஒரு ஆண்டு ஜாமீன் கிடைக்காததால், சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரன்யா ராவ் மீதான காபி போசா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குக்கு தடை கோரி, அவரது தாய் ரோகிணி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று வக்கீல் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்