“பைனலி” பாரத் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

‘பைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.;

Update:2025-11-24 17:10 IST

‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார். சினிஷ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை இன்று நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், மற்றொன்று ‘பைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படம்.

இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘பைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தை முருகு இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் நாயை மையமாக கொண்டு உருவாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் பாரத். அப்பாவியான ஒரு கேரக்டரை வைத்து யூடியூபில் புதிய டிரெண்ட்களை உருவாக்கிய சேனல் பைனலி. இவர் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்