'ஹிட் 3 படத்தை அவர்கள் தயவுசெய்து பார்க்க வேண்டாம்' - இயக்குனர் கோரிக்கை
ஹிட் 3 படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.;
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய இயக்குனர், 'ஹிட் 3 படம் வன்முறை நிறைந்ததாக இருக்கும். எனவே, 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவுசெய்து இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்' என்றார். இப்படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.