“மொழி எனக்கு தடையல்ல; கதைதான் முக்கியம்” - கல்யாணி பிரியதர்ஷன்
பல மொழிகளில் இருந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கல்யாணி தெரிவித்துள்ளார்.;
‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். சூப்பர் ஹீரோயினாக அவர் நடித்த இந்த படம் பல மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பல மொழிகளில் இருந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கல்யாணி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கதை கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பேன். மராத்தி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழியை நான் ஒருபோதும் தடையாக பார்த்ததில்லை” என்று கூறினார்.
மேலும், “கதை சொல்லல் என்பது உலகளாவிய உணர்ச்சி. ஒரு படத்திற்கு என் முழு நேரத்தையும் மனதையும் கொடுக்க விரும்புகிறேன்” என்றும் கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.