’திடீர் பிரபலத்தால் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?’ - கிரிஜா ஓக் பதில்

நடிகை கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார்.;

Update:2025-11-29 11:51 IST

சென்னை,

ஷாருக்கானின் 'ஜவான்' மற்றும் அமீர் கானின் 'தாரே ஜமீன் பர்' போன்ற படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்ற நடிகை கிரிஜா, சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார். இந்நிலையில், இந்த பிரபலம் தனது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என கிரிஜா கூறினார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ’இந்த பிரபலத்தால் என் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? என்று கேட்டால் நான் இல்லை என்று சொல்வேன். எனக்கு கூடுதல் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை மேலும், எனக்கு நிறைய எதிர்மறையான கருத்துகள்தான் வருகின்றன.

என் விலை எவ்வளவு?, என்னுடன் ஒரு மணி நேரம் செலவிட எவ்வளவு செலவாகும் என்று கேட்கிறார்கள். என்னைச் நேரில் சந்தித்தால் அவர்கள் என்னைப் பார்க்கக்கூட மாட்டார்கள். பார்த்தாலும் மரியாதையுடன் பேசுவார்கள். இவ்வளவு மோசமான கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள், ஆனால் இணையத்தில் அவர்கள் வாய்க்கு வந்ததைச் சொல்கிறார்கள்’ என்றார்.

நடிகை கிரிஜா ஓக் 2004 ஆம் ஆண்டு மராந்தி திரைப்படமான மணினி மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்