ஷர்வானந்த் படத்தில் இணையும் இளம் நடிகை?
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.;
சென்னை,
இயக்குனர் ஸ்ரீனு வைட்லா - நடிகர் ஷர்வானந்த கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையில், ’லால் சலாம்’ , ’மேட்' மற்றும் '8 வசந்தலு’ ஆகிய படங்களில் நடித்த அனந்திகா இந்தப் படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
8 வசந்தலு' படத்தின் மூலம் ஏற்கனவே இளைஞர்களின் இதயங்களை வென்ற அனந்திகா, இந்த படத்தில் ஷர்வானந்துக்கு ஜோடியாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் அவலுடன் உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், மற்றொரு மூத்த நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.