அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த’ஜூடோபியா 2 ’

இந்த அனிமேஷன் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.;

Update:2025-11-30 11:48 IST

சென்னை,

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்தின் சாதனையை முறியடித்து, சீன பாக்ஸ் ஆபீஸில் ஜூடோபியா 2 ஒரு வரலாறு படைத்துள்ளது. எண்ட்கேம் படம் முன்பு ஒரே நாளில் சுமார் $97.5 மில்லியன் வசூல் செய்து கிரீடத்தை வைத்திருந்தது, ஆனால் தற்போது ஒரே நாளில் $100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்து ஜூடோபியா 2 அதை முந்தியுள்ளது.

உலகளவில், இந்தப் படம் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதனால் முதல் வார இறுதியில் 500 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனிமேஷன் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது 'ஜூடோபியா 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்