’அதனால் அறையை விட்டு வெளிய வரவே பயந்தேன்’ - லோகா பட நடிகை

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா ' படம் மாபெரும் வெற்றியை பெற்றது.;

Update:2025-12-20 18:48 IST

சென்னை,

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா ' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் இந்த பட அனுபவங்களை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், 'இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது. சூப்பர் வுமன் என்றால் என்ன? அந்த வேடத்தில் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. என் கையில் அப்போது படங்கள் எதுவும் இல்லை. நான் அதைச் செய்ய விரும்பவில்லை என்றாலும், அதை ஏற்றுக்கொண்டேன்.

இந்தப் பயம் எனக்கு மட்டுமல்ல, எங்கள் யூனிட்டில் உள்ள ஒரு இருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் இருந்தது. ரிலீஸ் நாளில் நாங்கள் உணர்ந்த பதற்றம் அதுதான். முதல் விமர்சனம் வரும் வரை நாங்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை. நாங்கள் எவ்வளவு பயந்தோமோ, அவ்வளவு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றோம். மதியம் 3 மணிக்கு, நாங்கள் அனைவரும் அறையை விட்டு வெளியே வந்து கொண்டாடினோம்," என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்