பிரதமர் மோடியின் ’பயோபிக்’...பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு
இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கிறார்.;
சென்னை,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'மா வந்தே' என்ற திரைப்படம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கிறார். வீர் ரெட்டி தயாரிக்கும் இத்தப் படத்தை கிராந்திகுமார் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை "மா வந்தே" திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் காட்டப்பட உள்ளது. இந்திய திரைப்படத் துறையின் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு உருவாகும் இந்தப் படம், பான் இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.