வைரலாகும் ’நிகிலா விமல்’ படத்தின் டிரெய்லர்
நிகிலா விமல் கடைசியாக ’கெட் செட் பேபி’ படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
நிகிலா விமல் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் ’பென்னு கேஸ்’. இப்படம் ஜனவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பெபின் சித்தார்த் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை முகேஷ் ஆர் மேத்தா, உமேஷ் கேஆர் பன்சால், ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் சிவி சாரதி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் நிகிலா விமலுடன் இணைந்து, அஜு வர்கீஸ், ஹக்கிம் ஷாஜஹான், ரமேஷ் பிஷாரடி, இர்ஷாத் அலி, பிபி குன்ஹிகிருஷ்ணன் மற்றும் ஜோதிடர் ஹரி பதானபுரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாக இன்னும் பல நாட்கள் உள்ளநிலையில், படக்குழு தற்போதே அதன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிகிலா விமல் கடைசியாக ’கெட் செட் பேபி’ படத்தில் உன்னி முகுந்தனுடன் நடித்திருந்தார்.