“துரந்தர்” பட நடிகையை முத்தமிட்ட சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகர்
‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ. 745 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;
‘தெய்வத்திருமகள்’ படத்தில் நிலாவாக நடித்த சாரா அர்ஜுனை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. படத்தின் இறுதியில் விக்ரம், சாரா அர்ஜூன் இடையே நடக்கும் பாச போராட்டம் அனைவரது கண்களையும் குளமாக்கியது. அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'சைவம்' படத்தில் சாரா நடித்தார். மும்பையைச் சேர்ந்த சாரா அர்ஜுன் அதனைத்தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக ‘துரந்தர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் சாராவுக்கு தந்தையாக 71 வயதான மூத்த நடிகர் ராகேஷ் பேடி நடித்திருந்தார். துரந்தர் படத்தின் விழாவில் சாராவின் தோளில் முத்தமிட்ட நடிகர் ராகேஷ் பேடியின் வீடியோ இணையத்தில் வைரலானது. அதை தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக டிரோல் செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள ராகேஷ் பேடி, “ நடிகை சாரா ‘துரந்தர்’ படத்தில் என் மகளாக நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், ஒரு மகள் ஒரு தந்தையை அன்பாக அணைத்துக்கொள்வது போல அவள் என்னை வரவேற்பாள். எங்களுக்குள் நல்ல தந்தை-மகள் பிணைப்பு இருக்கிறது. அன்று மேடையில் நான் அதே பாசத்தைக் காட்டினேன். ஆனால் மக்கள் அதில் அன்பைக் காணவில்லை. தவறாக பார்க்கும் கண்களை நாம் என்ன செய்ய முடியும்?”என்று தெரிவித்துள்ளார். ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ. 745 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.