16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் ' படத்தின் 2-ம் பாகம்?

3 இடியட்ஸ் திரைப்படம் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்த முதல் இந்திய திரைப்படமாகும்.;

Update:2025-12-20 17:09 IST

சென்னை,

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் திரைப்படம் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்த முதல் இந்திய திரைப்படமாகும்.

இந்நிலையில், 16 வருடங்களுக்கு பின் 3 இடியட்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் அடுத்த பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு 4 இடியட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் , நான்காவது இடியட்டாக நடிக்க ஒரு பிரபலமான நடிகரை தயாரிப்பாளர்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

4 இடியட்ஸ் படத்தை ராஜ்குமார் ஹிரானியே இயக்க உள்ளதாகவும், விது வினோத் சோப்ரா தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்