’என் உலகம் அந்த 2 விஷயங்களை சுற்றியே நகர்கிறது’ - பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா தற்போது அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார்.;

Update:2025-11-22 08:10 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா(பாலையா). இவர் தற்போது அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையில், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணா, தான் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே கனவு காண்பதாகவும் , அதையே சுவாசிப்பதாகவும் கூறினார். புகழ்பெற்ற என்டிஆரின் மகனாக இருப்பதில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

தனது உலகம் திரைப்படங்கள் மற்றும் சமூக சேவையைச் சுற்றியே சுழல்கிறது என்றும், சினிமாவைப் போல வேறு எதுவும் தன்னை உற்சாகப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்