வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சம்பாதித்திருக்கிறேன் - நடிகர் அல்லரி நரேஷ்
அல்லரி நரேஷ் தற்போது நடித்துள்ள படம் ’12எ ரெயில்வே காலனி’.;
சென்னை,
நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் தற்போது நடித்துள்ள திரில்லர் படம் 12எ ரெயில்வே காலனி. இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.
இந்நிலையில், அல்லரி நரேஷ், ஒரு சுவாரஸ்யமான கருத்தை கூறி கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெற்றிகளை விட தோல்விகளையே தான் அதிகம் சம்பாதித்திருப்பதாக கூறினார். தனது வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என இரண்டையும் கண்டதாகவும், தோல்விகள் தனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்து, சிறந்த நடிகராக வடிவமைத்ததாகவும் அவர் கூறினார்.
இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.