அவர் படம் என்பதால் கதையை கேட்காமலேயே கையெழுத்திட்டேன்- ராசிகண்ணா

கதையை படிக்காமலேயே நான் கையெழுத்திட்ட முதல் படம் இதுதான் என்று ராசி கண்ணா கூறியுள்ளார்.;

Update:2025-12-03 10:44 IST

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வரும் ராசி கண்ணா தற்போது பவன் கல்யாணுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார். ‘உஸ்தாத் பகத்சிங்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் ராசி கண்ணா படத்தின் கதையைப் படிக்காமலேயே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- "கதையை படிக்காமலேயே நான் கையெழுத்திட்ட முதல் படம் இது. இந்த முடிவு என் நீண்ட கால கனவில் இருந்து வந்தது. ‘உஸ்தாத் பகத்சிங்’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் பணியாற்ற விரும்பும் ஒரு நபர் பவன் கல்யாண் தான். நான் அதை ஒருபோதும் விட்டு விட மாட்டேன். என் கனவு நனவாகியுள்ளது.

இது ஒரு முழுமையான வணிக படம். ஒரு பாடல் இருக்கிறது. நடிப்பை அதிக மாக எதிர்பார்க்க முடியாது. கவர்ச்சி இருக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்