நடிகர் பவன் கல்யாணுக்கு எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா மந்திரி
தெலுங்கானா மந்திரிகள் அடுத்தடுத்து பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.;
நகரி,
ஆந்திர துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், ஆந்திராவின் கோணசீமா பகுதியில் தென்னைமரங்கள் பட்டுபோனதற்கு தெலுங்கானா மக்களின் கண்திருஷ்டிதான் காரணம் என்றும், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததற்கு கூட கோணசீமா பகுதி பச்சை பசேல் என்று இருப்பது தான் காரணம் என்று சமீபத்தில் சர்ச்சையாக கருத்து கூறினார். இதற்கு தெலுங்கானாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கு தெலுங்கானா மந்திரிகள் அடுத்தடுத்து பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக அம்மாநில மந்திரி வெங்கடரெட்டி கூறியதாவது:- "தெலுங்கானா மக்களிடம் பவன் கல்யாண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு தெரிவிக்காவிட்டால் தெலுங்கானாவில் பவன் கல்யாண் நடித்த ஒரு படத்தை கூட திரையிட விடமாட்டோம்" என்று கூறயுள்ளார்.