நினைவு மறவா ரசிகர்கள் நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.;
ஈரோடு,
ஈரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் குமார். நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், தனது கடையில் சில்க் ஸ்மிதாவின் படங்களை பொருத்தி உள்ளார். அவர் ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அதன்படி நேற்று தனது கடையில் ரசிகர்களுடன் கேக் வெட்டி சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளையும் இலவசமாக வழங்கினார். மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படத்துடன் கூடிய 2026-ம் ஆண்டு காலண்டர் வழங்கப்பட்டது.
முக்கிய தலைவர்கள், முன்னணி நடிகர், நடிகைகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கவர்ச்சி நடிகை என பெயர் பெற்ற சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை நினைவு மறவாமல் ரசிகர்கள் கொண்டாடியது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.