தனது நிறைவேறாத ஆசை பற்றி மனம் திறந்த விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.;
சென்னை,
விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படம் வருகிற 31-ம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனின்போது, விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், "தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் மின்னல் முரளி வந்தது. பின்னர், லோகா வெளிவந்தது, நான் இன்னும் என் சூப்பர் ஹீரோ படத்திற்காக காத்திருக்கிறேன்" என்றார்.
பிரவீன் கே இயக்கிய, ஆர்யன் ஒரு கிரைம் திரில்லர். இதில் , மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் , செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.