ஒரே நாளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், மிருணாள் தாகூர் படங்களின் டீசர்
விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷ் படம் மற்றும் மிருணாள் தாகூரின் டகோயிட் ஆகிய படங்களும் ஒரே தேதியில் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது.;
சென்னை,
இந்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தெலுங்கு படங்கள் அவற்றின் டீசர் ரிலீஸில் கவனத்தை ஈர்த்துள்ளன. விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷ் படம் மற்றும் மிருணாள் தாகூரின் டகோயிட் ஆகிய இரண்டு படங்களும் வருகிற 18-ம் தேதி டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ரவி கிரண் கோலா இயக்கத்தில் எஸ்விசி பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் முதல் படமாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டிருந்தநிலையில், வருகிற 18 ஆம் தேதி டீசரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
மறுபுறம், மிருணாள் தாகூரின் டகோயிட் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தயாரிப்பு தாமதங்கள் படத்தை 2026க்கு தள்ளிவிட்டன. இப்படத்தின் டீசர் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது.