’நயன் சரிகா’வின் புது படம் - டைட்டில் வெளியீடு
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் யதுநாத் மாருதி ராவ் இயக்குகிறார்.;
சென்னை,
'ஆய்', ’கா’, ’கம் கம் கணேஷா’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நயன் சரிகா, இப்போது ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் யதுநாத் மாருதி ராவ் இயக்குகிறார். ஸ்ரீ சுப்பிரமணியேஸ்வரா சினிமாஸ் என்ற பதாகையின் கீழ் சுமந்த் நாயுடு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சத்யா, பிரம்மாஜி, பிரவீன், ஸ்ரீகாந்த் ஐயங்கார், கோபராஜு ரமணா மற்றும் பிரமோதினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'விஷ்ணு வினியாசம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.