’சதி லீலாவதி’ - டிரெண்டாகும் லாவண்யா திரிபாதியின் ஸ்பெஷல் லுக்

லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.;

Update:2025-12-16 00:09 IST

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து 'மாயவன்', 'தணல்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது.

சமீபத்தில் லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, தாதினேனி சத்யா இயக்கும் இப்படத்திற்கு 'சதிலீலாவதி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. 'சகுந்தலம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் கோடையில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று லாவண்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சதி லீலாவதி படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து கூறி இருந்தது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்