''ஸ்கூல் டாப்பர் ...நடிகையாகவே முடியாதுன்னு பயந்தேன்'' - அனுபமா

அனுபமா தன் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்தார்.;

Update:2025-09-30 10:08 IST

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கிஷ்கிந்தாபுரி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் அனுபமா தன் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்தார். ஸ்கூல் டாப்பர் இல்லாததால் நடிகையாகவே முடியாது என்று பயந்ததாக அவர் கூறினார்.

ஆவர் பேசுகையில், "சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவங்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நல்லாப் படிப்பவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும். அது என் மனதில் ஆழமாக பதிந்தது.

நான் ஸ்கூல் டாப்பர் இல்லை. நடிகையாவே முடியாதுன்னு பயந்தேன். அதனால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் படிப்புக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்தேன் " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்