’அவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போனேன்’...வைஷ்ணவி சைதன்யா
''பேபி'' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வைஷ்ணவி சைதன்யா.;
சென்னை:
தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வைஷ்ணவி சைதன்யா கவனம் பெற்று வருகிறார். பேபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், அந்தப் படத்தின் வெற்றியால் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த பேபி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதைத் தொடர்ந்து, வைஷ்ணவிக்கு தெலுங்கில் தொடர் வாய்ப்புகள் குவிந்தன. இதன் பின்னர் லவ் மீ, ஜாக் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது, அவர் பல புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய வைஷ்ணவி, நடிகர் ராம் பொதினேனியின் தீவிர ரசிகை என தெரிவித்தார். குறிப்பாக, தேவதாசு திரைப்படத்தில் ராம் பொதினேனியின் நடிப்பு தன்னை பெரிதும் பிரமிக்க வைத்ததாக அவர் கூறினார்.
மேலும், விருதுகள் மற்றும் பொது விழாக்களில் கலந்து கொள்வதை விட, தனியாக நேரத்தை செலவிடுவதையே தான் அதிகம் விரும்புவதாகவும் வைஷ்ணவி சைதன்யா தெரிவித்துள்ளார்.