சினிமாவை நான் எப்போதும் விட்டுவிட மாட்டேன்- நடிகர் விக்னேஷ்

'ரெட் பிளவர்' படத்தின் மூலம் மறுபிரவேசம் எடுத்த நடிகர் விக்னேஷ் இயக்குனர் சீனுராமசாமி டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.;

Update:2025-08-22 11:31 IST

சென்னை,

'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்', 'ராமன் அப்துல்லா', 'பொங்கலோ பொங்கல்', 'சூரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் விக்னேஷ். இடையில் சில ஆண்டுகள் படங்கள் நடிக்காத சமீபத்தில் 'ரெட் பிளவர்' படத்தின் மூலம் மறுபிரவேசம் எடுத்தார்.

இந்தநிலையில் 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கோழிப்பண்ணை செல்லதுரை' படங்களை இயக்கிய சீனுராமசாமி டைரக்டு செய்யும் புதிய படத்தில் விக்னேஷ் நடிக்கவுள்ளார். அதேபோல ராஜநாதன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். புதிய கதைகளும் கேட்டு வருகிறார்.

இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், ''தோல்விகளை கடந்தும் இந்த சினிமாவில் நான் பயணிக்க காரணம் உழைப்பும், நம்பிக்கையும் தான். இந்த சினிமாவை நான் எப்போதுமே விட்டுவிட மாட்டேன். சில நேரங்களில் என்னடா இது? என்றுகூட வாழ்க்கையை எண்ணி துவண்டு போயிருக்கிறேன். ஆனாலும் சினிமாவை விட்டுவிட மனதில்லை. காரணம், முடியாது என்று கைவிட்டு போனவர்கள், தோல்வியடைந்து துவண்டு போயிருப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நான் இருக்கவேண்டும் என்பதால் தான். இப்போது மீண்டும் படங்கள் நடித்து வருகிறேன். விட்ட இடத்தை நிச்சயம் பிடிப்பேன்'', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்