’இந்தியில் அந்த வகை படங்களில் நடிக்க விரும்புகிறேன்’ - ராஷி கன்னா

ராஷி கானா, தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்கில் நடித்து வருகிறார்.;

Update:2025-11-29 13:36 IST

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தெலுசு கடா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தச் சூழலில், இவர் சமீபத்திய பேட்டியில் மிகவும் சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசுகையில்,

“நான் தென்னிந்தியாவில் நிறைய வணிகப் படங்களில் நடித்திருக்கிறேன். அதனால்தான் இந்தியில் வலுவான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

ராஷி கானா, தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்கில் நடித்து வருகிறார். நட்சத்திர இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது, மேலும் இது ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்