தனுஷின் "இட்லி கடை" படப்பிடிப்பு நிறைவு

தனுஷ், நித்யா மேனன் நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-04-26 14:15 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

சமீபத்தில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் பாங்காக்கில் நடைபெற்றது. அங்கு அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், 'இட்லி கடை' படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்