'கடந்த காலத்திற்கு சென்றால்...அவர்களை அறைவேன்' - விஜய் தேவரகொண்டா

கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதிலளித்தார்.;

Update:2025-04-28 18:45 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது கிங்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் தேவரகொண்டாவிடம், கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு விஜய் தேவரகொண்டா, "நான் ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன். அவர்களை சந்தித்து இரண்டு அறைகள் கொடுப்பேன். அதேபோல் ஔரங்கசீப்பிற்கும் இரண்டு மூன்று அறைகள் கொடுக்க விரும்புகிறேன். இந்த சமயத்தில் எனக்கு இதுதான் நியாபகம் வருகிறது' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்