ஜப்பானின் வெளியாகும் ’அனிமல்’ படம்...ரசிகர்கள் உற்சாகம்
இதில், கதாநாயககியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.;
சென்னை,
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்த 'அனிமல்' திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 917 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதில், கதாநாயககியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
அடுத்தாண்டு பிப்ரவரி 13 அன்று அனிமல் திரைப்படம் அங்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு ஜப்பான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.