சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு: பிரபலங்களின் சொத்துகள் முடக்கம்
சூதாட்ட செயலி வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.;
புதுடெல்லி,
சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்புடைய ரூ.1,000 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அந்த செயலிக்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்ததுடன், அந்த குற்றப்பணத்தில் சொத்துகள் வாங்கியதாக சில கிரிக்கெட், சினிமா பிரபலங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, வங்காள நடிகை அங்குஷ் ஹஸ்ரா, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.