ரவி தேஜாவின் அடுத்த படத்திற்கு இந்த பெயரா?

ரவி தேஜா அடுத்ததாக இயக்குனர் கிஷோர் திருமாலா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது;

Update:2025-06-03 19:42 IST

சென்னை,

ரவி தேஜா, தற்போது பானு போகவரபு இயக்கும் மாஸ் ஜாதராவின் படப்பிடிப்பில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாக உள்ளது. இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார்

இதற்கிடையில், ரவி தேஜா அடுத்ததாக இயக்குனர் கிஷோர் திருமாலா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்றும்  அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு 'அனார்கலி' என்று பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்