தாயாரின் பிறந்தநாளை தங்க கேக் வெட்டி கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா
நடிகை ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி டிரெண்டிங்காகி வருவது மட்டுமின்றி சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.;
சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. 'லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஊர்வசி ரவுத்தேலாவின் நடவடிக்கை அடிக்கடி டிரெண்டிங்காகி வருவது மட்டுமின்றி சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் தங்க செல்போன் திருடு போய்விட்டது எனவும், ஆன்லைன் சூதாட்ட விளம்பர செயலியில் நடித்து அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியது, பத்ரிநாத் கோவில் அருகே எனக்கு கோவில் இருக்கிறது என கூற மத குருக்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளான சம்பவங்கள் என அடிக்கடி அவர் பேசும் பொருளாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி ரவுத்தேலா நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். பிறந்தநாள் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஊர்வசி ரவுத்தேலா உலகின் மிக உயரமான ஓட்டலில் என் தாயின் பிறந்த நாள் உலகளவில் கொண்டாடப்படு கிறது. 24 காரட் தங்க கிரீடம் கேக், தூய அன்பு என பதிவிட்டுள்ளார்.