‘லோகா’க்குப் பிறகு கவர்ச்சியில் கவனம் செலுத்தும் கல்யாணி?

லேசான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை கல்யாணி பிரியதர்ஷன் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.;

Update:2026-01-23 09:01 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான "ஹலோ" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு தமிழில் "ஹீரோ" மூலம் அறிமுகமானார். அதில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'லோகா சாப்டர்-1 : சந்திரா' என்ற மலையாள படம் வெளியானது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்தம் குடிக்கும் மோகினியாக அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை குவித்த ‘லோகா' படத்துக்கு பிறகு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிப் போயுள்ளார், கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு, பாலிவுட் சினிமாவிலும் கதவு திறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை கல்யாணி பிரியதர்ஷன் இனி கவர்ச்சி காட்ட முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. லேசான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டு வருவதும், பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கொஞ்சம் ‘தாராளம்' காட்டுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தியுள்ளது. கல்யாணி பிரிதர்ஷன் சரியான பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டார் என முன்னணி நடிகைகள் சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்