"பேபி கேர்ள்" படத்தின் டீசரை வெளியிட்ட நிவின் பாலி
"பேபி கேர்ள்" படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார்.;
சென்னை,
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’சர்வம் மாயா’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பேபி கேர்ள்’ என்ற படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்வம் மாயாவுக்கு பிறகு இப்படம் வெளியாகி உள்ளதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், பேபி கேர்ள் படத்தின் டீசரை நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதற்கிடையில், நடிகர் நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.