தமிழ் சினிமாவில் கால் பதிக்க தயாரான ஷ்ரத்தா கபூர்?

மகிழ்திருமேனி, தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.;

Update:2025-11-17 20:04 IST

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ஸ்ட்ரீ 2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தமிழில் கால் பதிக்க தயாராகி உள்ளதாக தெரிகிறது. அஜித்தின் விடாமுயர்ச்சி படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல், சஞ்சய் தத்தை வில்லன் வேடத்தில் நடிக்கவைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. இருப்பினும், இது குறிந்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்