ஒரே படத்தில்...தமிழில் ஹீரோ, தெலுங்கில் வில்லனாக நடிக்கிறாரா சூரி? சுஹாஸ் விளக்கம்

மதிமாறன் புகழேந்தி இயக்கும் 'மண்டாடி' படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.;

Update:2025-05-08 13:54 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் 'விடுதலை பாகம் 1' 'கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'மண்டாடி' என பெயரிடப்பட்டுள்ளது. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள, இப்படத்தில் சூரி தமிழில் ஹீரோவாகவும், தெலுங்கில் வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என நடிகர் சுஹால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஹாஸ் கூறும்போது, " நான் நடிக்கவிருக்கும் தமிழ் படம் 'மண்டாடி' பற்றிய ஒரு சிறிய விளக்கம் தர விரும்புகிறேன். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வதந்திகள் அனைத்தும் தவறானது. சூரி அண்ணா இரண்டு மொழியிலும் ஹீரோவாகவே நடிக்கிறார். நான் வில்லனாக நடிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்