"மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்!" - சிவகார்த்திகேயன்
சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மதராஸி படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதற்கிடையில், சென்னை வடபழனியில் ‘பேன்லி’ எனும் செயலியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார்.
மேலும், "இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்!". என்று கூறியுள்ளார்.