ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தில் ஷாருக்கான்?

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகர் ஷாருக்கான் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-12-01 23:15 IST

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரபல கன்னட நடிகையான மேக்னா ராஜ் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவருக்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் அடுத்தாண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்