விமலின் “மகாசேனா” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்
விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் 12-ந்தேதி வெளியாகிறது.;
நடிகர் விமல் நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது வடம் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மகாசேனா’. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் டிசம்பர் 12-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.