மம்முட்டியின் “களம் காவல்” பட பிரீ ரிலீஸ் டீசர் வெளியீடு

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-02 08:13 IST

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படமான ‘களம் காவல்’ படத்தில் நடித்துள்ளார்.

இதில் மம்முட்டியுடன் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பிரீ ரிலீஸ் டீசர் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்