''அதுதான் எனது ஒரே கவனம்'' - கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன், கார்த்தியுடன் ''மார்ஷல்'' படத்தில் நடித்து வருகிறார்.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன், ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் பகத் பாசிலுடன் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' மற்றும் நஸ்லெனுடன் ''லோகா'' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதில், ''லோகா'' படம் வருகிற 28-ம் தேதியும் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' படம் 29ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழில் ரவிமோகனின் ''ஜீனி'' படத்தில் நடித்து முடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், கார்த்தியுடன் ''மார்ஷல்'' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புவதாக கூறினார். அவர் கூறுகையில்,
"என்னுடைய படங்களை நான் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். இப்போது தமிழில் கார்த்தி சாருடன் 'மார்ஷல்' படத்தில் நடிக்கிறேன். அதுமட்டும்தான் எனது ஒரே கவனம். ரவிமோகனின் ''ஜீனி'' படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது" என்றார்.