நட்சத்திர வாரிசாக தனது போராட்டங்கள் - மனம் திறந்த ஜான்வி கபூர்
ஒரு நட்சத்திர வாரிசாக இருப்பதால் தான் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றி ஜான்வி பேசினார்.;
மும்பை,
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு நட்சத்திர வாரிசாக இருப்பதால் தான் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றிப் பேசிய ஜான்வி, நட்சத்திர வாரிசாக இல்லாதவர்கள் பெரிய அளவில் சாதிப்பதை கேட்க விரும்பும் பலர், திரைப்படக் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி கேட்க பெரும்பாலும் விரும்புவதில்லை என்று கூறினார்.
நட்சத்திர வாரிசாக இருந்தாலும், அவர்களும் கடினமாக உழைக்க வேண்டும், ரிஸ்க் எடுக்க வேண்டும், ஒவ்வொரு படத்திலும் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஜான்வி தென்னிந்திய சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்தின் மூலம் அறிமுகமானார், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து அவர் ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடித்து வருகிறார்.