ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்... நாளை வெளியாகிறது ’டைட்டில்’
இதில், கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.;
சென்னை,
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார்.
பணத்தை மையமாக வைத்து ஆக்சன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ’டைட்டில்’நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.