''வரவு'' படப்பிடிப்பில் விபத்து....ஜோஜு ஜார்ஜ், தீபக் பரம்போல் காயம்

''வரவு'' படத்தை ஷாஜி கைலாஸ் இயக்குகிறார்.;

Update:2025-09-21 09:14 IST

திருவனந்தபுரம்,

''வரவு'' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தீபக் பரம்போல் காயமடைந்துள்ளனர். ஜோஜு ஓட்டி வந்த ஜீப் கவிழ்ந்ததில் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் அவர்கள் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூணாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

''வரவு'' படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபுராஜ், வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன், அஷ்வின் குமார், அபிமன்யு திலகன், பிஜு பாப்பன், பாபி குரியன், அஸீஸ் நெடுமங்காட், ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், பாலாஜி ஷர்மா, சாலி பாலா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்