’விஜய் சேதுபதிபோல இருக்க விரும்புகிறேன்’ - பிரபல நடிகை
விஜய் சேதுபதியின் பெண் வெர்ஷனாக இருக்க விரும்புவதாக நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.;
சென்னை,
அல்லரி நரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள "12 ஏ ரெயில்வே காலனி" படத்தில் காமாட்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ரிலீஷுக்கு முன்னதாக, காமாட்சி சில விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அவர் பேசுகையில்,
'விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் எல்லா வகையான வேடங்களிலும் நடிக்கிறார்கள். அவரைபோல இருக்க விரும்புகிறேன். எனது ஐந்து வருட பயணத்தில், விருபக்சா மற்றும் பாலிமேரா போன்ற படங்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளன ” என்றார்.