‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.;
டிரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் சான்ட்ரா டிசோசா ராணா தயாரித்து ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்'. இதில் வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம், இதுவரை பல்வேறு உலக நாடுகளில் திரையிடப்பட்டு 120-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் வருகிற 21-ந் தேதி தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் திரையிடப்பட உள்ளது.
கிறிஸ்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.